ராஜபாதை

Written by
Bro.Felix

முகவுரை
- தேவன் எளியவர்களை உயர்த்துகிறார் என்பதை வேதம் துவக்கத்திலிரு ந்தே சொல்கிறது. இவ்வுலக வாழ்க்கை எப்படி இருக்கும்? அதிலிருந்து தேவன் ஒருவனை எப்படி உயர்த்துவார்? என்பதைப் பல கதைகளின் வ ழியாக நாம் அறிந்து கொள்கிறோம். அனைவராலும் வெறுக்கப்பட்ட, ப கைக்கப்பட்ட, புறந்தள்ளப்பட்ட ஒருவனை தேவன் எவ்வாறு உயர்த்தின ார்? எவ்வளவு உயர்த்தினார்? ஏன் உயர்த்தினார் ?உயர்த்தப்பட்டவன் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும்? என்பது போன்ற எத்தனையோ ே கள்விகளுக்கான பதிலாய் நம்முன் நிற்கிறது யோசேப்பின் சரித்திர ம்.
- அது யோசேப்பின் சரித்திரம் மாத்திரமல்ல, நம் ஒவ்வொருவரின் கதை யிலும் ஒரு பகுதியை அதனுடன் பொருத்திப்பார்க்க முடியும். பகை, வெ றுப்பு, ஏமாற்றம் ஆகியவைகள் சூழ்ந்ததுதான் இவ்வுலகம். ஆனால் தவனை நம்புகிற ஒருவன், தரிசனத்தை உடைய ஒருவன் எதை அடை ய முடியும் என்பதற்கு அத்தாட்சியாய் யோசேப்பின் வாழ்க்கை நமக்குப் பாடம் சொல்கிறது.
- தேவன் உங்களைக் குறித்து வைத்திருக்கும் நோக்கம் குறைவானதல் ல. சிகரம் தொடும் வாழ்க்கை ஒன்று உங்களுக்காகக் காத்துக்கொண்டி ருக்கிறதை உங்களால் பார்க்க முடிகிறதா? இன்னும் நீங்கள் அரிய ண ஏறாதவர்களாக இருக்கலாம் ஆனால் உங்களுக்காக ஓர் அரியப ண காத்துக் கொண்டிருக்கிறது என்பதை அறிவிக்கவே இந்தப் புத்தகம். சிங்காசனம் அல்லது உயர்ந்த பதவிகளைக் கற்பனை செய்து பார்க்கு ம்போது பொன்னும் வைரமும் வைத்த அலங்கரிக்கப்பட்ட சிங்காசன
- மா அல்லது உயரமான சுழலும் நாற்காலியோ கண்களுக்குத் தெரிந்து உணர்ச்சிகளில் இன்பம் பெருக்கெடுத்து ஓடக்கூடும். ஆனால் அவைக ளை அடைவதற்குப் போகும் பாதைகள் அத்தனை சுகமான அனுபவம் ாக இருப்பதில்லை. சிங்காசனம் செல்லும் வழி சுலபமானது அல்ல. ரா ஜபாதைகள் குழிகள் நிறைந்தது, குற்றச்சாட்டுகளின் கூர்முனைகளை யும், சிறைச்சாலைகளின் கதவுகளையும் கடந்து போகவேண்டிய நிர்பந் தம் ஏற்படலாம். பாதைகள் பளிங்குகளால் ஆனதல்ல, சறுக்கல்கள் நி றைந்ததுதான். ஆனால் அரியணை காத்துக்கொண்டிருக்கிறது. நமக் குத் தரப்பட்ட கனவை ஒருவேளை நாம் மறந்து போயிருக்கலாம். ஆன ால் கனவைத் தந்தவர் அதை மறப்பதில்லை என்பதின் அடையாளமாக வே இப்புத்தகம் இப்போது உங்கள் கைகளில் தவழ்கிறது.
- யோசேப்பு விசேஷித்த ஆவியுடையவன். ஆவி என்றால் சிந்தை அல்ல து மனப்பான்மை என்று அர்த்தம். சரியான சிந்தையே சரித்திரத்தை ம ஈற்றும். ஆத்துமா வாழ்வதுபோல்தான் எல்லாவற்றிலும் வாழ்ந்திருக்க முடியும் என்பது வேதாகம விதி.
உயர்ந்த இடங்களுக்குச் செல்வதற்கு சிலர் தந்திரங்களையும், சிலர் ம ந்திரங்களையும் முயற்சிக்கிறார்கள். சிலர் பிறப்பால் அல்லது பதவியில் உள்ளவர்களின் சிபாரிசால் அடைந்தும் விடுகிறார்கள். ஆனால் அப்ப டி அடைந்தவர்கள் பலர் அதில் நிலைநிற்பதில்லை. அரசாளச் சிறைசா லையிலிருந்து புறப்படுவாருமுண்டு, ராஜாங்கத்தில் பிறந்து ஏழையாே வாருமுண்டு (பிரசங்கி 4:14). உங்களுடைய பின்னணியோ, படிப்போ, தகுதியோ உங்களை உயர்த்தப்போவதில்லை. உங்களுடைய குணமே உங்களை குன்றின்மேல் வைக்கும்.
- நீங்கள் ஒவ்வொருவரும் அரியணை ஏறவேண்டும், உச்சம் தொடும் வ ாழ்க்கையை அடையவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
சிந்தை சீர் அடைந்தால் வாழ்க்கை சீர்பெறும்.