சிறந்த விற்பனை கோர்ஸ்

Friendship with Money

பணத்துடன் நட்பு

"பணத்துடன் உங்கள் உறவை குணமாக்குங்கள்"

பணம் உங்களுக்கு எதிரியா, நண்பனா? "பணத்தை நான் எப்படி பார்க்கிறேன்?" என்ற கேள்விக்கு நேர்மையான பதில் தேடினால், உங்கள் பால்ய காலத்திலிருந்து ஓடி வந்த சில காயங்கள் வெளிப்படும். இந்தக் கோர்சில் நான் கற்றது - பணம் பாவமும் அல்ல, இரட்சிப்பும் அல்ல. அது ஒரு கருவி. ஐந்து நாட்கள், ஒவ்வொரு ரூபாயையும் வேதத்தின் கண்ணாடி வழியே பார்க்கக் கற்றுக்கொள்ளப் போகிறீர்கள்.

5 நாட்கள் · சிறப்பு கோர்ஸ்
💬 வாட்ஸப்பில் சேருங்கள்
📞 தொடர்பு: 9892860372

இந்த கோர்சில் நீங்கள் கற்றுக்கொள்வது

01

பண காயங்களை கண்டறிதல்

குழந்தை பருவத்திலிருந்து வந்த, உங்கள் நிதி முடிவுகளை கட்டுப்படுத்தும் பண நம்பிக்கைகளை வெளிப்படுத்துதல்

02

குடும்ப பண முறைகள்

தலைமுறைகளாக தொடரும் வறுமை சாபங்களை உடைத்து, செழிப்பு ஆசீர்வாதங்களை வரவேற்றல்

03

பண மனப்பான்மை மாற்றம்

வறுமை மனப்பான்மையிலிருந்து செழிப்பு மனப்பான்மைக்கு உங்கள் மனதை புதுப்பித்தல்

04

வேதாகம நிதி கொள்கைகள்

தேவனின் நிதி முறையை புரிந்துகொண்டு, கிறிஸ்துவ விசுவாசியாக பணத்தை பயன்படுத்துதல்

05

செழிப்புக்கான சவால்

5வது நாள்: நீங்கள் பணத்துடன் ஒரு புதிய, ஆரோக்கியமான நட்பை கட்டுவதற்கான நடைமுறை நடவடிக்கைகள்

இந்த கோர்ஸ் உங்கள் வாழ்க்கையை எவ்வாறு மாற்றும்

எனக்கு நினைவிருக்கிறது - வீட்டில் "நாங்கள் ஏழை, நம்மால் முடியாது" என்ற வார்த்தையை எத்தனை முறை கேட்டிருப்பேன். அந்த வார்த்தைகளே மனதில் கோட்டை கட்டிவிட்டன. ஏசாயா 48:17-ல் தேவன் சொல்கிறார், "பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதிக்கிறவரும், நீ நடக்கவேண்டிய வழியில் உன்னை நடத்துகிறவருமாகிய கர்த்தர் நானே." பணத்தைப் பற்றிய தவறான பார்வை நம்மை வழிதவறச் செய்கிறது. இந்தக் கோர்சில் Felix சகோதரன் பண காயங்களை ஒவ்வொன்றாய் அகற்ற உதவுகிறார், பணத்தை தேவனுடைய பார்வையிலிருந்து பார்க்கக் கற்றுக் கொடுக்கிறார்.

ஐந்து நாட்கள் கழித்து நீங்கள் பணத்தைப் பார்க்கும் விதமே மாறியிருக்கும். பணம் எதிரியாய் இருக்காது, ஊழியத்துக்கும் ராஜ்ய விரிவாக்கத்துக்கும் ஒரு வேலைக்காரனாய் மாறும்.